ஆதிசங்கரர் அவதாரம்

Athisankarar

கி.பி. 7ம் நூற்றாண்டில், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் கடவுள் பக்தி கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் தங்களது புத்திர பாக்கியத்திற்காக திருச்சூர் வடக்குநாதரை வேண்டி கடுமையான விரதங்களை மேற்கொண்டனர். ஒருநாள் சிவகுருவின் கனவில் தோன்றிய சிவன், குறைந்த ஆயுளுடன் எல்லா நற்குணங்களும் ஞானமும் கொண்ட புத்திசாலிப் பிள்ளை வேண்டுமா அல்லது நீண்ட ஆயுளை உடைய சாதாரண மகன் வேண்டுமா? என்று கேட்டார். Continue reading

அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்

matruraivaratheeswar

மாற்றுரைவரதர் (பிரம்மபுரீஸ்வரர், சமீவனேஸ்வரர்)

ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க்கு அடியனும்

ஆனேன் உரிமையால் உரியோன் உள்ளமும் உருகும் ஒண்மலர்ச் சேவடி

காட்டாய் அருமையாம் புகழார்க்கு அருள்செய்யும் பாச்சி லாச்சிராமத்து எம்

அடிகள் பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில் இவரலாது இல்லையோ பிரானார்.

-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 62வது தலம்.

 தல சிறப்பு:

கருவறையில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். ராஜகோபுரத்தின் கீழே அதிகார நந்தி, மனைவியுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். இங்குள்ள நவக்கிரகத்தில் சூரியன் தன் மனைவியர் உஷா, பிரத்யூஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை பார்த்தபடி இருக்கிறது. பிரகாரத்தில் சகஸ்ரலிங்க சன்னதி உள்ளது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 62 வது தேவாரத்தலம் ஆகும். Continue reading

அருள்மிகு வைகுண்டவாசர் திருக்கோயில்

vaikundavasa perumal -

தலபெருமை:

வைகுண்ட பெருமாள் கையில் பிரயோக சக்கரம் வைத்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். அருகில் மார்க்கண்டேயர் தவம் செய்தபடி இருக்கிறார். திருமணச்சீராக அவர் கொண்டு வந்த மோதிரம் வலது கையில் இருக்கிறது.

சுவாமி நேரடியாக வைகுண்டத்தில் இருந்து வந்து, “வைகுண்டவாசர்’ என்று பெயர் பெற்றதால், இத்தலத்தையே வைகுண்டமாக கருதி,  சொர்க்கவாசல் அமைக்கப்படவில்லை. ஏகாதசியன்று சுவாமி, கருட வாகனத்தில் வலம் வருகிறார். சுவாமி எதிரே கருடாழ்வார் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவரது இறகுகள் மூடிய நிலையில் இருக்கிறது. Continue reading

அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில் ( பார்க்கவேஸ்வரர்)

velleeswarar

தல சிறப்பு:

  • துர்க்கையிடமும், பிரயோக சக்கரம் இருக்கிறது. துர்க்கையை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது.
  • கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் சிவன், அம்பிகைக்கு பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

தலபெருமை:

இக்கோயிலில் சிவன், சதுர பீடத்துடன் அருளுகிறார். துவாரபாலகர்கள் கிடையாது. சுக்ராச்சாரியாருக்கு (வெள்ளி என்றும் பெயருண்டு) காட்சி தந்தால் இங்கு சிவன், “வெள்ளீஸ்வரர்’ என்ற பெயரிலேயே அருளுகிறார். பார்க்கவேஸ்வரர் என்றும் இவருக்கு பெயருண்டு. இவருக்கான அம்பாள், மாங்காடு தலத்தில் இருக்கிறாள். எனவே, காஞ்சிபுரம் போலவே இங்கும் அம்பிகை சன்னதி கிடையாது. சுவாமி சன்னதி எதிரே, அம்பாள் பாதம் மட்டும் இருக்கிறது. இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்பவர்கள், சன்னதி எதிரே தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். Continue reading

அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்

masilamaneeswarar1
தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இத்தலத்தில் உள்ள சுயம்புலிங்கம், தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் காட்சி தருகிறார். வெட்டுப்பட்ட காயத்தை குளிர்விக்கும் வகையில், ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அருளும் இவர், சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் இரண்டு தினங்கள் மட்டும் சந்தனக்காப்பு இல்லாமல் நிஜ திருமேனியுடன் காட்சி தருகிறார். அந்நேரத்தில் இவரை வழிபட்டால் பாவங்கள் நீங்கப்பெற்று, முக்தி பெறலாம் என்பது நம்பிக்கை. இவருக்கு அபிஷேகம் இல்லாததால், ஒரு பாதரசலிங்கத்தை தனிச்சன்னதியில் வைத்து பூஜிக்கிறார்கள். மூலவரின் விமானம் கஜப்பிருஷ்ட (யானையின் பின்பகுதி) அமைப்புடையது. Continue reading

அருள்மிகு மாங்காடு காமாட்சி திருக்கோயில்

mangadu-

தல சிறப்பு:

அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம். இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார். இங்கு ஸ்ரீ சக்ரம்தான் பிரதானமாக கருதப்படுகிறது. அபிசேகம் பஞ்சலோக காமாட்சிக்கும், அர்ச்சனை ஸ்ரீ சக்ரத்துக்கும் செய்யப்படுகிறது.

தல வரலாறு:

கைலாயத்தில் ஒருசமயம் பார்வதிதேவி, விளையாட்டாக சிவனின் கண்களை மூட, உலக இயக்கமே நின்றது. சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த அம்பிகை மன்னிப்பு கோரினாள். இத்தலத்தில் தவமிருந்து வழிபட, தகுந்த காலத்தில் காட்சி தந்து அவளைத் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்படி இங்கு வந்த அம்பாள் பஞ்சாக்னியை (ஐந்து அக்னிகள்) வளர்த்து, அதன் மத்தியில் இடது கால் கட்டைவிரலை ஊன்றி நின்று கடுந்தவமிருந்தாள். காஞ்சிக்குச் சென்று தவமிருக்கும்படி சிவனின் அருள்வாக்கு கிடைக்கவே அங்கு சென்றாள். இருப்பினும், அம்பிகை முதன் முதலாக தவம் செய்த இடம் என்பதால் மாங்காடு “ஆதி காமாட்சி தலம்’ எனப்படுகிறது.

அம்பாள் அந்தஸ்தில் ஸ்ரீசக்ரம் பொதுவாக மூலஸ்தானத்தில் அம்பிகைதான் பிரதான தெய்வமாக (மூலவர்) வணங்கப்படுவாள். ஆனால், இக்கோயிலில் அர்த்தமேரு ஸ்ரீசக்ரமே அம்பாளாக கருதி வணங்கப்படுகிறது. ஸ்ரீசக்ரத்திற்கு பின்புறம் அம்பாளின் உற்சவர் சிலை இருக்கிறது. இவளுக்கே அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்படுகிறது. இங்கு தவம் புரிந்த அம்பாள், சிவனின் உத்தரவிற்கு பின்பு காஞ்சிபுரம் சென்றாள். அப்போது தவம் செய்த பஞ்சாக்னியை அணைக்காமல் சென்றதால் மாங்காடும் சுற்றுப் பிரதேசங்களும் தீயின் வெம்மையால் வறண்டன. இந்நிலையில் தேசாந்திரம் செல்லும் போது ஆதி சங்கரர் மாங்காட்டின் நிலையறிந்து அஷ்டகந்தம் எனப்படும் 8 மூலிகைகளால் ஆன ஸ்ரீ அர்த்தமேரு ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்கிறார்.இதனால் தீயின் கொடுமை மறைந்து மக்கள் சுபிட்சம் பெற்றனர் என வரலாறு கூறுகிறது.

SEE ALSO : அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்

சிறப்பம்சம்:

அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம். இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார். இங்கு ஸ்ரீ சக்ரம்தான் பிரதானமாக கருதப்படுகிறது. அபிசேகம் பஞ்சலோக காமாட்சிக்கும், அர்ச்சனை ஸ்ரீ சக்ரத்துக்கும் செய்யப்படுகிறது.

mangadu kamatchi

ஸ்ரீஅர்த்தமேரு ஸ்ரீசக்ரம் ஆதிசங்கரர் :

இக்கோயிலிலுள்ள அர்த்தமேரு ஸ்ரீசக்ரம் மிகவும் விசேஷமானது. 43 திரிகோணங்கள் கொண்ட இச்சக்ரம், “அஷ்டகந்தம்’ என்னும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது. சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர். இச்சக்ரத்திற்கு விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. அன்று ஒருநாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும். இத் திருக்கோயிலில் ஸ்ரீ சக்ரத்திற்கே முக்கிய பிராதானம்.மூலிகைகளால் ஆனதால் அபிசேகம் கிடையாது.குங்கும அர்ச்சனை விசேசமானது.இந்த அர்த்தமேரு ராஜ யந்திரமாகும்.இதற்கு கூர்மம்(ஆமை) உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி அதற்கு மேல் 16 இதழ் தாமரை அதற்கும் மேல் 8 இதழ் தாமரை அமைத்து அதன்மேல் ஸ்ரீ சக்ர யந்திரம் வரையப்பட்டுள்ளது.இந்தர அர்த்தமேரு மிகப்பெரியது.இம்மாதிரி வேறு எங்குமே இல்லை.இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள்.

பிரார்த்தனை

இத்தலத்தில் ஆறு வார வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது. வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் எலுமிச்சைக் கனியுடன் அம்மனைத் தரிசித்து பின்னர் அதே கிழமைகளில் தொடர்ந்து ஆறு வாரங்கள் (அதாவது ஒரு மண்டலம் ) வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடுகிறது.

அம்பாள் இத்தலத்தில் தவம் புரிந்து பின்னர் இதன் பயனால் காஞ்சியில் மணந்து கொண்டமையால் கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் மணக்கோலம் பூணுவர். ஆண்களுக்கும் இது பொருந்தும். புத்திர பாக்கியம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே குழந்தைக்குதொட்டில் கட்ட அன்னை அருள்புரிவாள்.பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும். பல்லாயிரக்கணக்கோர் ஆறு வார வழிபாட்டால் பலனடைந்து வருகின்றனர். உத்தியோக உயர்வு , உடல் சார்ந்த குறைகள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்திற்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.

முகவரி:

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு-602101, காஞ்சிபுரம் மாவட்டம்.

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்

thiruvaleesvarar

தல சிறப்பு:

மூலவர் சுயம்பு மூர்த்தி. இவருக்கு மேல் உள்ள விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின்புறம்) அமைப்புடையது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 254 வது தேவாரத்தலம் ஆகும்.புராண பெயர்-திருவலிதாயம்

பிரார்த்தனை

சுவாமியை வணங்கிட திருமணத்தடை, நோய்கள் நீங்கும், தெட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வணங்கிட ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பவுர்ணமியில் சுவாமியை வழிபட்டால் நற்பேறு கிடைக்கும்.

தலபெருமை:

குருதலம்: வியாழன், தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால், பாவம் நீங்கி மோட்சம் கிட்டும் என்றார். அதன்படி இங்கு வந்த வியாழன், புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார்.

இத்தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிட தோஷங்கள் நீங்கும், குருபகவானை வணங்கினால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.) பிரம்மபுத்திரிகளான கமலி, வல்லி ஆகிய இருவரையும் விநாயகர் இத்தலத்தில் தான் திருமணம் செய்து கொண்டார் என வரலாறு கூறுகிறது. இதற்கு சான்றாக இங்கு கமலை, வல்லிகளுடன் இருக்கும்படியான விநாயகரின் உற்சவர் சிலை உள்ளது. இத்தலம், நடுநாயகமாக இருக்க சுற்றிலும் மாலையிட்டது போல 11 திருத்தலங்கள் அமைந்திருப்பது சிறப்பு.

இத்தலத்திற்கு வந்தாலே முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். பிரகாரத்தில் சுவாமியை நோக்கியபடி தனி சன்னதியில் குருபகவான், சிவலிங்கத்தை வழிபட்ட நிலையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. சிவன், தனக்கு பூஜை பெறுவதை உரிமையாக உடையவர் என்பதால் இவர், “பலிதாயர்’ என்றும் அழைக்கப்படுகிறார். பலி என்றால் பூஜை, தாயம் என்றால் உரிமை என்று பொருள்.

thiruvaleethayam

SEE ALSO : வாலீஸ்வரர் கோவில் வரலாறு

தல வரலாறு:

வியாழபகவானின் மகனான பரத்வாஜர், கரிக்குருவியின் (வலியன்) பிள்ளையாக பிறந்தார். தான் பறவையாக பிறந்ததைக் கண்டு வருத்தமடைந்த பரத்வாஜர், பல புண்ணிய தலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது, கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார். லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்து பறவைகளின் தலைவனாகும்படி அருளினார். எனவேதான், இத்தலம் “திருவலிதாயம்’ என்றும், சிவன் “வலியநாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

பாடல்: தேவாரப்பதிகம் பத்தரோடு பலரும் பொலியம்மலர் அங்கைப் புனல்தூவி ஒத்தசொல்லி உகத்தவர்தாம் தொழுது ஏத்த உயர் சென்னி மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலிதாயம் சித்தம் வைத்த அடியாரவர் மேலடை யாமற்றிடர் நோயே. திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 21வது தலம்.

முகவரி:

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம், சென்னை-600 050.

யோகா என்றால் என்ன..?

yoga

யோகா என்பது உடல் பயிற்சி அல்ல.

உங்கள் உடலை முறுக்கிக் கொள்வது,

மூச்சைப் பிடித்துக் கொள்வது,

தலையில் நிற்பது,

இவையெல்லாம் யோகா அல்ல.

யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள்.

அதாவது

உடல்,

மனம்

இவைகளை ஒன்றிணைக்கும் செய்யும் பயிற்ச்சியே யோகா பயிற்ச்சி ஆகும்.

மற்றும், Continue reading

சிறப்பு பயிற்சி பெறுகிறார், கிஷோர் !

kishore

‘இளமி’ படத்தில் கிஷோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். அவர் இதுவரை ஏற்று நடித்திராத வேடம் இது. 18–ம் நூற்றாண்டு காலகட்டத்தை உள்ளடக்கிய கதை என்பதால், கிஷோர் கதாபாத்திரம் மிக வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. Continue reading

” தல 55 “

thala55

கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித்தின் அடுத்த படமான ‘தல55’, என்னதான் பல மாதங்களாக படப்பிடிப்பில் இருந்தாலும் இன்னும் முடிந்த பாடில்லை. Continue reading